தீப திரு நாளில்......

தீய எண்ணத்த எரித்துவிடு.....

தீய செயலை தூக்கியெறி......

தீய பார்வையை மறைத்துவிடு.....

தீய பேச்சை துப்பியெறி......

தீய தொழிலை செய்யாதே......!


தீங்கு செய்வாரோடு சேராதே......

தீச்சொல் கூறி திரியாதே.......

தீயவை எல்லாம் ஒழித்துவிடு.......

தீப காந்திகல்போல் வாழ்........

தீம் சொல்லால் பேசு..........

தீரம் கொண்டசெயல் செய்.....

தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....!


&

இனிய

இனிப்பான 

இனிய தீபாதிருநாளின்

இனியவனின்

இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

-----------

தமிழன் ஜல்லி கட்டுக்காக .......

மட்டும் இங்கு போராடவில்லை ......
தமிழனை ஒரு சில்லியாய் .....
நினைக்காதே என்பதற்கு ........
சல்லி சல்லியாய் குவிக்கிறான் ......!!!

ஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ......
காளைகள் கூட அடங்காமல் ......
சீறிப்பாய்ந்தன காளையை .....
அடக்குபவன் சீறிப்பாய் வான் ....
எனபதை மறந்து விடீர்களே .......???

போதும் உங்கள் அடக்குமுறை ......
இதற்கு மேல் அடக்கினால் ......
அடங்கிவிடும் எல்லாம் கவனம் .......!!!
தூபமிடாதீர்கள் இளைஞரின் ......
உணர்வுகளுக்கு தீயாக மாறினால் .....
தாங்கவே மாட்டீர்கள் ...............!!!

&
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்

------------

அடுக்கு  மொழி பேசி .......
கவிதை எழுதும் நேரம் .....
இதுவல்ல -என்றாலும் .....
அடக்க நினைப்பவனை ....
அடுக்கு மொழியால் .....
சாட்டை அடி அடிக்கவே .....
அடுக்கு மொழியை ......
பயன்படுத்துகிறேன் ......!!!

ஜல்லியாய் பாயும் காளையை ......
கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ......
தமிழினத்தை - கிள்ளி எறியலாம் .....
என்று தப்பு கணக்கு போடும் .....
சில்லறைகளே - நாம் கல்லறை ....
என்றாலும் நிறைவேறாது .....
உங்கள் எண்ணம் ..............!!!

பாய்ந்து வரும் காளைகள் ......
எங்கள் நெஞ்சின் மேல் .....
பாய் வதில்லை நாங்கள் .....
நெஞ்சுசோடு அணைக்கவே .....
பாய் கின்றான் - அடக்காதீர் ....
அடக்கினால் உங்கள் நெஞ்சின் .....
பாய் வதற்கு வெகு தூரமில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம் 
-----------

ஹைக்கூ கவிதைகள்


இல்லாவிட்டாலும் பிரச்சனை    
இருந்தாலும் பிரச்சனை                                                                                                                                
பணம்

*******************************
உடல் சுத்தம்
உள்ளச்சுத்தம்
தியானம்
******************************
மழலைகளிடம்
மூட நம்பிக்கை விதைப்பு
சரஸ்வதி இலை படிப்பு தரும்
************************************
பரவசம் அடைந்தனர்
பார்க்கும் மனிதர்கள்
கவலையில் கூட்டில் கிளி
**********************************
அம்மாவை விட
மழலைகள் மகிழ்ந்தன
பாடசாலை விடுமுறை
**********************************
இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது
முதுமை
*********************************
தோற்றம் மறைவு
சாதாரண மனிதனுக்குத்தான்
போராளிக்கு இல்லைபணம்

  அன்போடு கிள்ளினாய்
நீ மகிந்தாய்-நான் இறந்தேன்
+ ரோஜா மலர் +

உன் அழகில் சுற்றுவேன்
எனக்கும் மகிமை
+வண்டு +

நிழல் வேண்டும்
காற்று வேண்டும்
+மரம் வெட்டுவோம் +

வென்றாலும் வலி
தோற்றாலும் வலி
காதல்


படித்ததை உறுதிப்படுத்தும்
காற்றிலே பறக்கிறது
பட்டம்

அம்மா என்று கத்துவதால்
அம்மாவின் பாலுக்கு பதில்
பசும் பால்

நெருப்பிலும் கொடியது
புகையில்லாமல் புகையும்
பகை

அள்ள அள்ள சுரக்கும்
அமுத சுரபி
கிணறு


பெற்றோருக்கு ஊன்றும் தடி
குடும்பத்துக்கு ஆலம் விழுது
குடும்ப தலைவன்

தவறுகளை நியாயப்படுத்தும்
விட்ட தவறை உணர்த்தும்
கண்ணீர்

உலகை மறந்தேன்
என்னை இழந்தேன்
அவள் சிரிப்பு

தெரிந்தும் வரும்
தெரியாமலும் வரும்
தவறு


தோல்வி நிறைந்தது
வெற்றி நிச்சயம்
முயற்சி


பகுத்தறிவு
ஆராயும் உச்சம்
உயிர்

உயிர் கொண்டு எழுதுகிறேன்
உயிராய் நினைக்கிறேன்
கவிதை

ஞானிக்கு மூலாதாரத்தில்
காதலனுக்கு இதயத்தில்
உயிர்

உடல் வேறுபடும்
எல்லாம் சர்வமயம்
உயிர்

காலன் எடுக்க துடிக்கிறான்
காதலன் சேர துடிக்கிறான்
உயிர்

உடல் இயங்குகிறது
அவள் செல்லப்பெயர்
என் உயிர்

இருந்தால் வீடு
போனால் கூடு
உயிர்

இருவரால் வரும்
ஒருவரால் போகும்
உயிர்

பூக்களுக்கு மகரந்தம்
தேனீக்களுக்கு பூக்கள்
உயிர்

ஆடாத ஆட்டம் ஆடும்
ஆறடிக்குள் அடங்கிவிடும்
உயிர்

ஓரறிவு தாவரம்
ஆறறிவு மனிதன்
இயக்குவது உயிர்

வருவது தெரியாது
வந்தால் போகாது
நட்பு


பள்ளி பருவம் தொடங்கி
பல் விழுந்த பருவம் வரை
நட்பு

கண்டவுடன் கொண்டாலும்
கண்டமற்றது
நட்பு


தடக்கி விழுந்தால் தூக்கும்
தூக்கிவிடுவதே தொழில்
நட்பு


காடு செல்லும் போது
முதல் கட்டை பிடிப்பது
நட்பு


தேய்ந்தாலும் அழகு
வளர்ந்தாலும் அழகு
நிலா

தூய்மையானது
வெண்மையானது
மனம்

பெற்றோருக்கு ஊன்றும் தடி
குடும்பத்துக்கு ஆலம் விழுது
குடும்ப தலைவன்

தவறுகளை நியாயப்படுத்தும்
விட்ட தவறை உணர்த்தும்
கண்ணீர்

உலகை மறந்தேன்
என்னை இழந்தேன்
அவள் சிரிப்பு

தெரிந்தும் வரும்
தெரியாமலும் வரும்
தவறு 

தோல்வி நிறைந்தது
வெற்றி நிச்சயம்
முயற்சி

விழுது விட்டு நீடூடி
பரம்பரைக்காக வாழ்
ஆலமரம்

தொடர்ந்து நன்மை செய்
ஞானம் பெறுவாய்
அரசமரம்

காதலின் சின்னம்
கல்லறையாக இருக்கிறது
தாஜ்மஹால்

------

பண்பாடுகள் பாழாய் போகிறது 

கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை 

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு 


&

கவிப்புயல் இனியவன் 

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

------

காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள் 

தாயின் கையை தட்டி விட்டது குழந்தை 

நிலா சோறு 


&

கவிப்புயல் இனியவன் 

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 



ஊர்வன கற்றுதந்தவை சில ஹைகூவாக

சுறுசுறுப்பாக இரு
எதிர்காலத்துக்கு சேமி
எறும்பு

***************************
ஐம் புலன்களையும் அடக்கு
ஞானியாவாய்
ஆமை

****************************
முன்னேற்றத்துக்காக
கொள்கையை மாற்று
பச்சோந்தி

******************************

பொறுமையாக செயல்படு
இலக்கை அடை
நத்தை

******************************

செய்வது கொடுமை
ஊரில் நற்பெயர்
நல்ல பாம்பு (நாக பாம்பு )
**********************

பறவைகள் கற்று தந்த படிப்பினைகள்
சில ஹைக்கூ வடிவில்


பிறர் பிள்ளையை
தன் பிள்ளையாக வளர்
காகம்

*******************

அழகாக இருந்தால்
ஆபத்தை சந்திப்பாய்
கிளி

*******************

கூட்டு குடும்பத்தை
கற்று தந்தது
காகம்

******************

நல்ல வாய்ப்பு வரும் வரை
பொறுமை வேண்டும்
கொக்கு

******************

உயரே சென்றால் நிலையை
நிலையாக வைத்துக்கொள்
பருந்து


பத்தும் பலதாய் வரும்
பத்திரமாத தங்கம்
-பத்திரிக்கை -

ஆரோக்கியனுக்கு சங்கடம்
நோயாளிக்கு அன்பளிப்பு
--மரணம்--


வடிந்தால் அழகு
பாய்ந்தால் பயம்
--நீர் --


பலத்தாலும் மேன்மை
குணத்தாலும் மேன்மை
--யானை --


இனிக்கும் நீரையும் (அன்பு ) தரும்
வெறிக்கும் நீரையும் ( சோகம் ) தரும்
---தென்னை --


பிள்ளையாருக்கு பால் அபிசேகம் 
ஏக்கத்துடன் பார்க்கிறது
- பசித்திருக்கும் குழந்தை-

வரைபவனுக்கு படைப்பு
பார்ப்பவனுக்கு பொழுதுபோக்கு
ஓவியம்

பிள்ளையாருக்கு பால் அபிசேகம்
ஏக்கத்துடன் பார்க்கிறாள்
- பால் வற்றிய தாய் -


அருந்ததி பார்த்தவள்
அருந்தி விட்டால் நஞ்சு
வரதச்சனை கொடுமை

விழுந்தால் மரம்
தொங்கினால் ஊஞ்சல்
ஆலம் விழுது

வருவதும் தெரியாது
போவதும் தெரியாது
உயிர்

வருமதி இருந்தால்
மானம் இருக்கும்
-வருமானம் -

தனிமையில் சிரித்தல்
தனிமையில் அழுதல்
காதல்


உலகெங்கும் ஒரே மாதிரி
அழும் கலையை கற்றது
மழை


கடவு சீட்டில்லாமல்
உலகை சுற்றிவரும்
பறவை

மலர்
ஈசல்
ஒருநாள் ஆயுள்

இரண்டு குரலை
இணைக்கும் தரகர்
தொலைபேசி

நானும் பிச்சை எடுக்கிறேன்
ஒவ்வொரு நிறுவனமாய்
வேலை தேடி


தொழிலை செய்
சம்பளம் கிடைக்காது
சாதிபட்டம் உண்டு

குதிரைக்கு அழகு
மக்களுக்கு சுமை
வரி

மரம் பரவசப்பட்டது
கிளையெல்லாம்
ஜோடிக்கிளிகள்

எனக்கும் உனக்கும்
தெரியாமல் அழுதேன்
கனவில்


நிமிடத்துக்கு மாறும் சிரிப்பு அழுகை
காரணம் வேறென்ன..?
காதல்...!

உடல் உயிர் கொல்லி எயிற்ஸ்
உள உயிர் கொல்லி
காதல்


மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள்
ஹைக்கூ வடிவில் சில

***********************************
உடம்பையே வளர்க்காதே
நம்பிக்கையையும் வளர்
யானை

காப்பவனை காப்பாற்று
கற்றுதந்தது
நாய்

குறிக்கோளுடன் வாழ்
தன்னிலை இழக்காதே
புலி

வாழ்க்கை ஒரு சுமை
அழாமல் சுமந்துகொள்
கழுதை

உழைக்காமல் சாப்பாடு
மெத்தையில் தூக்கம்
பூனை


இனப்பெருக்கம்
கற்றுத்தந்தது
பன்றி

----------

மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே 
பூசகரும் பூரண சைவம் 
கோயிலில் மச்ச அவதார சிலை 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 
-----

வயல் நிலங்கள் வெடித்தது 
வறட்சியால் பயிர்கள் இறப்பு 
வெட்டிய மரங்களின் சாபம் 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

-------

நிலத்தில் கோடுகள்
வறுமை கோடானது 
நீடிய வறட்சி 

&
கவிப்புயல் இனியவன் 
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

பிரம்ம முகூர்த்த நேரம் 
ஒலித்தது ஆலயமணி ஓசை 
கவலையோடு கோபுர புறா 

&
கவிப்புயல் இனியவன் 
ஹைக்கூ  தொடர் 
---------

நீ 
அருகில் இருக்கும்.....
நொடிகள் எல்லாம் .....
என்கடிகார முற்கள் ......
நெருஞ்சி முற்கள்.....
என்னை விட்டு பிரிய....
போகிறாய் என்றதும்.....
முள்ளாய் குத்துகிறது.....!!!

&
இனிக்கும் 
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன் 
-----------
ஆயிரம் கவிதைகள் ....
ஆயிரம் பின்னூடல்கள் ....
ஆயிரம் கவிரசிகர்கள்.....
பலநூறு சிறப்புகவிதை ....!

அத்தனையையும் ....
தாண்டிய சிறப்புகவிதை .....
என்னவள் சொன்ன வார்த்தையே.....!

என் கவிதையை ...
ரசித்து விட்டு சொன்னாள்.....
இத்தனை கவிதையை......
எழுதிய உன் கையில்.......
முத்தமிட்ட ஆசை......!

அவளுக்கு புரியவில்லை.....
அவள் இல்லையேல் எனக்கு......
கவிதையே இல்லை............!

++
கவிப்புயல் இனியவன்
நீ இல்லையேல் கவிதையில்லை

------------------
கனவிலும் .........
நினைவாலும் ......
கொல்வது போதாதென்று ......
மௌனத்தாலும் ......
கொல்கிறாய் ..........
தயவு செய்து நிஜமாய்......
கொண்றுவிடு .........!

என் குறைந்த பட்ச....
கோரிக்கை நீ வேண்டும் .....
அதிக பட்சகோரிக்கை .....
நீயே வேண்டும் ........
முடியாதுபோனால் ........
உன் காதல் வேண்டும் .....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கொஞ்சம் கொஞ்சமாக 
மறந்து வருகிறேன் 
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க 
ஊற்றாய் வருகிறது 
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால் 
வலி இருக்கலாம் 
வலியே காதலாக 
இருக்குதடி என் வாழ்வில் ...!!!


ஒரு ஜீவாத்மாவின் கவிதை
-----------------

என்னை 
அவர்கள் மதிக்கவில்லை......
என்று கோபப்படாமல்......
அவர்கள் மதிக்கும்படி........
நான் மாறவில்லை என்று ......
கவலைப்படு - காரணத்தை.....
தேடு மதிக்கப்படுவாய்.......!!!

பாராட்டும் போது......
துள்ளி குதிக்கும் மனம் .......
விமர்சிக்கும் போது.......
துவண்டு விழுகிறாய்.......
அப்போ உன் மனத்தை ......
கடிவாளம் போட்டு ....
வழிநடத்துகிறாய்..........
கடிவாளத்தை கழற்று ......
சவாரிசெய் நிச்சயம் விழுவாய்......
காயப்படுவாய்.......
ஆனால் வாழ்க்கையில் ......
வெற்றி பெறுவாய்,............!!!

கரையில் நின்று கடலை ......
பார்த்தால் தப்புக்கடலும்.....
சமுத்திரமாய் தெரியும்.......
ஆழ்கடலில் நின்று கரையை....
பார்ப்பவனுக்கு கடலும் கரையும்.....
ஒன்றுதான் .........
எல்லவறையும் சமனாக.......
நோக்குபவனே .......
சாதனையாளனாகிறான்.....!!!

&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்

-----

ஒரு ஜீவன் வதைக்கபடும் .....
போது உன் உயிரும் வதை .....
படனும் அப்போதான் நீ ஜீவன் .....
வதைக்கப்படும் ஜீவனை....
பார்த்து பதபதக்கும் ஜீவன்....
ஜீவாத்மா அல்ல பரமாத்மா......!!!

படைப்புகள் எல்லாம் ஒன்றே......
வடிவங்களே வேறுபடுகின்றன......
உயிரெல்லாம் ஒன்றே உடல் வேறு......!!!

எல்லவற்றையும் விரும்பு .......
அளவோடு  விரும்பு ......
எல்லா வற்றிலும் சமனாக...
பற்றுவை‍ _ எதில் அளவு .....
அதிகமாகிறதோ அதுவே.....
உனக்கு மரணத்தின்......
நுழைவாயில்............................!!!

அன்பு ..பாசம்.. கருணை...
இரக்கம்..பற்று..காதல்....
தியாகம்....எல்லமே அளவாக....
இருக்கவேண்டும் அளவுக்கு.....
மீறும் போது நீ மட்டுமல்ல.....
அவர்களும் துன்ப படுகிறார்கள்......!!!

&
ஒரு ஜீவாத்மாவின் கவிதை
கவிப்புயல் இனியவன்


--------

அதிகமாக காதல் வைத்தேன் ......

காதல் பைத்தியம் என்றார்கள்

அவளும் ஏற்று கொண்டாள்.....!!!


&

மூன்று வரி கவிதை 

கவிப்புயல் இனியவன் 

வெளியில் எத்தனையோ தடை ....

உள்ளே நீ என்னோடு பேசுவதால் ...

அத்தனை சுகத்தை காண்கிறேன் 


&

மூன்று வரி கவிதை 

கவிப்புயல் இனியவன் 

---------

நீ ......
என்னை ஒரு கனமேனும்....
காதலிக்காமல் நான் உயிர்....
துறக்க போவதில்லை ...!!!

என் ...............
காதல் நினைவுகளை..............
வீட்டின் ஒட்டடைபோல்.........
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!

​&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 184
-------
காதற்ற ............
ஊசியும் கூட.....
வராது என்பது.....
உண்மைதான் ...!!!
நீ .............
காதோரம் பேசிய.....
வார்த்தைகள்...
கல்லறை வரை.......
தொடருதே ....!!!

உன்னை '''''''''''
கண்ட நாள் முதல்''''''''''''''''
உள்ளங்கையில் இருக்கும்'''''''''''''''''
ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!

&

வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 185

--------------------

இனிய பொங்கல் வாழ்த்துகள்

இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்

இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்

இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்

இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!!


இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....

இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...

இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......

இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து......

இல்லறம் நல்லறமாக செழித்திட.......

இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!!


இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு......

இல்லத்தாரோடும் உறவுகலோடும்.....

இன்முகத்தோடு பொங்கலை உண்டு.....

இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......

இனிய உறவுகளுக்கு  இனியவனின்......

இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!!


இரவு பகலாய் வயலில் புரண்டு......

இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....

இன் முகத்தோடு அறுவடை செய்து.....

இவுலகுக்கே உணவு படைக்கும்.....

இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு.....

இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! 

--------------

ஓலமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

----

ஓகோ என்று வாழ ஆசைப்படாதே .....
ஓர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
ஓடம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
ஓடு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ஓட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ஓரங்கட்டி மக்களை ஒத்துக்காதீர் ....
ஓரம்போய் மக்களை விற்காதீர் .....
ஓலமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

ஓவியம் போல் மனதை அழகாக்கு....
ஓசையின் சொற்களை இனிமையாக்கு ....
ஓலை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ஓய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ஓர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ஓராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
ஓதல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ஓரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

^^^
அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

----------------------

இறைவா.....
நீயும் அவளைபோல்.....
கனவில் மட்டும்.....
வந்து போகிறாய்......!

என்  கவிதைகள்.....
சிவப்பு நிறமாய்.....
இருக்க காரணம் நீ.....!

மறதியின் இடத்துக்கு.....
மறந்து போய் போய்விட்டேன்
மறந்து போய் உன்னை.....
மறுபடியும்நினைத்து விட்டேன்........!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கடவுளும் காதலும்....
ஒன்றுதான் ......
இரண்டையும் உணரலாம்....
அடைய முடியாது........!

என் இறப்புக்கு முன்.....
இறப்பிடத்தை.......
காதலால் காட்டுகிறாய்.......!

உன்னை நினைத்து........
பூக்களை பார்க்கிறேன்.......
பூக்களே வாடி விழுகிறது....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
               இனியவன்
------------------------------

நீ....

காதலை.... 
மறுத்த அந்த நொடி.....
இதயம் கல்லறை......
சென்றுவிட்டது.....!

மூச்சு மட்டும்.......
பேச்சுக்காக இயங்குது.....
தோற்றுப்போனாலும்.....
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
உன் அழைப்புக்காய்.....!

எனக்காக ஒருமுறை....
வந்துவிட்டு போ......
இல்லை வந்து என்னை.....
கொண்றுவிட்டு போ....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

Make a free website with Yola